தகவல் அறியும் உரிமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தகவல் கோரப்பட்ட சில சந்தர்ப்பங்கள்

நாம் பொது மக்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எவ்வகையான தகவல்களை அவர்கள் பெற முனைவார்கள் என வினவிய போது, அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், பொதுத் துறை ஊழியர்களின் ஏதோவொரு வகையான ஊழலை எடுத்துக் காட்டினார்கள்; உதாரணமாக சொத்து சாற்றுதல்கள் மற்றும் அறிவிப்புக்கள், கேள்விப் பத்திரங்கள், சம்பளங்களில் முறைகேடுகள் மற்றும் அமைச்சர்களுக்கான சலுகைகளை போன்றன. பெப்ரவரி 3ம் திகதியிலிருந்து எழுந்த சில உயர்நிலை தகவல் கோரிக்கைகள் நிச்சயமாக முக்கிய கண்காணிப்புக்குரியன. இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதலாவது வாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஐந்து முறைகள் பின்வருமாறு

1. காணி அபகரிப்பு: குஞ்சுக்குளத்தில் விவசாய நில அபகரிப்பு தொடர்பாக 71 குடும்பங்கள் தலையீடு

குஞ்சுக்குளத்தில் 71 குடும்பங்கள், வன பாதுகாப்பு திணைக்களத்தின் 200ஏக்கர் சட்ட விரோத நில அபகரிப்பினை விசாரிக்க தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்

2. அமைச்சகங்களின் ஊழல்: அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தகவல் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார், அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்கிறார்

பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர்கள் போன்றனர் உரிமை கோரும் மது விற்பனைக்கான அனுமதி, பெட்ரோல் நிலையங்கள், மண் அகழ்வதற்கான அனுமதி, விமான நிலையங்களில் உள்ள கடைகள், சாணாலயங்களிலிருந்து அடுக்கப்பட்ட நிலங்கள் பற்றிய தகவல்களை ரஞ்சன் ராமநாயக்க வேண்டியுள்ளார். திரு. ராமநாயக்க அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆரம்பத்தில் விண்ணப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராவார். அவர் விண்ணப்பமிட்ட போது, திவுலபிட்டியவில் 100 அனுமதிகள் நிராகரிக்கப்பட்டிருந்தது. திரு. ராமநாயக்க அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

3. பொதுத் துறை ஊழியர்களின் சொத்துக்களின் விபரம் வெளியீடு: பிரதமர் மற்றும் ஜனாதிபதியை வினவுகின்றது Transparency International

நல்லாட்சி கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் Transparency International (Sri Lanka) பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் சொத்துக்களின் விபரங்களை வெளியிடுமாறு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. நாட்டின் மிக உயர் தலைமைத்துவப் பதவியை வகிக்கும் இருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும் என நிர்வாக இயக்குனர் அசோக ஒபேசெகார கூறுகிறார்.

4. நிலம் தொடர்பான உரிமைகள்: வெளியேற்றுதல்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தகவல்களுக்கான கோரிக்கை

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்துடன் (Centre for Policy Alternatives) தொடர்புடைய சிவில் சமூக ஆர்வலர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அழிவடைந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்களை அறிவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். து தொடர்பாக, 2013ம் ஆண்டில் தொகை மதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்ட போதிலும், இதுவரை அது வெளிவிடப்படவில்லை.உயர் ஆராய்ச்சியாளர் இரோமி பெரேராவிற்கு தொகை மதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் அவ்வறிக்கை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டது என அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் நல்லிணக்க ஆணைக்குழுவினை அணுகியபோது, ஆணையாளர் அது பற்றி எந்த யோசனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். திருமதி. பெரேரா அவர்கள், தகவல் அறியும் உரிமைக்கான தனது கோரிக்கையை தொகை மதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தகவல் அதிகாரிக்கு மின்னஞ்சலின் மூலம் தறிவித்துள்ளார்.

5. நிலைமாற்றுக்கால நீதி: மட்டக்களப்பு பெண்களின், காணாமற் போனவர்களின் தகவல் தொடர்பான கோரிக்கை

பன்னிரெண்டுக்கும் மேற்றப்பட்ட பெண்கள் அவர்களின் அன்பிற்குரியவர்கள் காணாமற்போனமை தொடர்பான தகவல் அறிவதற்காக கோரிக்கை விடுத்துள்ளனர்,அவர்களின் விண்ணப்பங்கள் மாவட்ட செயலகம், மாகாண மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையகம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் போன்ற அமைப்புக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வமைப்புக்களில் பல்வேறு தருணங்களில், பொதுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி விளக்கப்படுத்த வேண்டிய தேவை காணப்பட்டது.

6. பொருளாதார மீறல்கள்: பிக்கு குளியாப்பிட்டிய வாகன தொழிற்சாலை முறைகேடுகள் வெளிக்கொணர தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

மதிப்பிற்குரிய இத்தேகந்த சத்தாதிஸ்ஸ அவர்கள், குறிப்பிட்ட பொதுப் பொறுப்பாளருக்குரிய ஓர் நிலப் பிரதேசம் முதலீட்டுச் சபையுடன் இணைந்து வாகனத் தொழிற்சாலை அமைப்பதற்காக ஏன் தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டது என அறிய, தகவல் அறியும் உரிமையை பயன்படுத்த முனைகிறார். அவர் குறிப்பாக கோரும் தகவல்: தனியார் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் அத்திட்டம் கொண்டு வரும் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) தொடர்பானது.